» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோதையாறு படகு தளத்தில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் திடீர் ஆய்வு
திங்கள் 15, மே 2023 10:17:19 AM (IST)

கோதையாறு ஆற்றுப்பகுதி படகுதளத்தினை பேரூராட்சிகள் உதவி இயக்குநர் விஜயலெட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், கடையால் பேரூராட்சிக்குட்பட்ட களியல் கிராமம் வழியாக செல்லும் கோதையாறு ஆற்றுப்பகுதியில் படகுதளம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் படகுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். மேற்படி படகுதளத்தில் கடையால் பேரூராட்சி வாயிலாக படகுகள் டெண்டர் விடப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. படகுதளத்தில் 10 நபர்கள் பயணம் செய்யக்கூடிய 2 உந்து படகுகளும், 4 நபர்கள் பயணம் செய்யக்கூடிய 10 பெடல் படகுகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்றைய தினம் விளவங்கோடு வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு படகுதளம் குறித்த நிபந்தனைகளை தவறாது பின்பற்றி படகுகளை இயக்குவதை கடையால் பேரூராட்சி செயல் அலுவலர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து இன்று உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி கடையால் பேரூராட்சிக்குட்பட்ட களியல் கிராமம் வழியாக செல்லும் கோதையாறு ஆற்றுப்பகுதியில் படகுதளத்தினை நேரில் ஆய்வு மேற்கொண்டு, படகுதளம் குறித்த நிபந்தனைகளை தவறாது பின்பற்ற வேண்டுமென்று கடையால் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களுக்கும், படகு சவாரி உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)

பயிற்சி மாணவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யக்கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்
புதன் 7, மே 2025 12:32:08 PM (IST)

பாரதிதாசன் பிறந்தநாள் விழா போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
செவ்வாய் 6, மே 2025 4:10:43 PM (IST)

தற்காப்பு கலை பயிற்சி - ஆராய்ச்சி மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 6, மே 2025 11:18:58 AM (IST)

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)
