» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிறித்துவ நலவாரியம்: அரசின் சலுகைகளை பெற விண்ணப்பிக்கலாம்
வியாழன் 20, ஏப்ரல் 2023 4:12:16 PM (IST)
குமரி மாவட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் மூலம் அரசின் சலுகைகளை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள்/மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்பிக்க வேண்டும்.
மேற்காணும் திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்/மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.
அதன் விவரம் - 1.கல்வி உதவித்தொகை 10-ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை, 2.விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1,00,000/-, 3.விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10,000 முதல் ரூ.1,00,000/- வரை,
4.இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20,000/-, 5.ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5,000/-, 6.திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3,000/-(ம) பெண்களுக்கு ரூ.5,000/-, 7.மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000/- மற்றும் கருச்சிதைவு/கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3,000/-, 8.கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500/-, 9. முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000/- மேலும், விவரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
புதன் 16, ஜூலை 2025 11:24:24 AM (IST)

எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் கைது:பரபரப்பு வாக்குமூலம்
புதன் 16, ஜூலை 2025 10:50:48 AM (IST)

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
செவ்வாய் 15, ஜூலை 2025 10:33:29 AM (IST)

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
செவ்வாய் 15, ஜூலை 2025 10:25:16 AM (IST)

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)
