» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷியாவிடமிருந்து இந்தியா 30 நாள்கள் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி!
வெள்ளி 6, மார்ச் 2026 12:17:23 PM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துகொள்ள அமெரிக்கா தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக சந்தையில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனைச் சமாளிக்கும் விதமாக, அடுத்த 30 நாள்களுக்கு மட்டும் ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கிக்கொள்ள அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க நிதித்துறை விளக்கம்
இது குறித்து அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெசென்ட் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக கடலில் தடைபட்டுள்ள எண்ணெய் விநியோகத்தை சீராக்கவும், உலக சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டைக் குறைக்கவும் இந்த குறுகிய கால அனுமதி வழங்கப்படுகிறது." எனத் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், இந்தியா மீதான வர்த்தக வரிவிதிப்புகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடர்பாகக் கடும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. இதன் காரணமாக இந்தியா ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்திருந்தது. தற்போது உலகப் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த 30 நாள் சலுகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: அமெரிக்கா பின்வாங்க சவுதி அரேபியா வலியுறுத்தல்
புதன் 15, ஏப்ரல் 2026 4:35:33 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது அமெரிக்கா: கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8% உயர்வு!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:43:28 AM (IST)

அமெரிக்காவின் சர்வாதிகாரப் போக்கே பேச்சுவார்த்தை தோல்விக்குக் காரணம்: ஈரான் குற்றச்சாட்டு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 10:56:21 AM (IST)

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி; ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க டிரம்ப் உத்தரவு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 8:40:07 PM (IST)

நிலவின் மறுபக்கத்தைச் சுற்றி வந்த ஆர்டெமிஸ்-2 வீரர்கள் : உலக நாடுகள் பாராட்டு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 10:56:08 AM (IST)

அமெரிக்காவை இனி நம்ப முடியாது! - ஐரோப்பா தனி ராணுவம் அமைக்க ஜெலன்ஸ்கி அழைப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:32:39 PM (IST)

