» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வாட்ஸ்அப்பில் புதிய ஸ்பாய்லர் வசதி அறிமுகம் : மெசேஜ்களை மறைத்து அனுப்பலாம்!

செவ்வாய் 3, மார்ச் 2026 11:19:02 AM (IST)

வாட்ஸ்அப்பில் விரைவில் "ஸ்பாய்லர்” (Spoiler) என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல சமூக வலைத்தள செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களைக் கவரவும், சந்தைப் போட்டியைச் சமாளிக்கவும் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப்பில் விரைவில் "ஸ்பாய்லர்” (Spoiler) என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை வாட்ஸ்அப் அப்டேட்களை முன்கூட்டியே வெளியிடும் 'வாபீட்டா இன்போ' (WABetaInfo) தெரிவித்துள்ளது.

எப்படிச் செயல்படும் இந்த 'ஸ்பாய்லர்' வசதி?

பயனர்கள் தாங்கள் அனுப்பும் மெசேஜை 'ஸ்பாய்லர்' ஆப்ஷனைத் தேர்வு செய்து அனுப்பினால், அதைப் பெறுபவர்களுக்கு மெசேஜ் நேரடியாகத் தெரியாது. அந்த மெசேஜின் மீது ஒருமுறை 'டேப்' (Tap) செய்தால் மட்டுமே உள்ளே இருக்கும் விவரங்கள் திரையில் தோன்றும்.

தனிப்பட்ட சேட்களுக்கு மட்டுமின்றி, வாட்ஸ்அப் குரூப்களிலும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக, எழுத்து வடிவிலான (Text) மெசேஜ்களுக்கு மட்டும் இந்த வசதி கொண்டு வரப்படுகிறது. விரைவில் இதைப் புகைப்படங்கள் (Images) மற்றும் பிடிஎஃப் (PDF) கோப்புகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐபோன் பயனர்களுக்கு முதலில் வாய்ப்பு


தற்போதைய நிலவரப்படி, iOS வெர்ஷன் 26.6.10.71-ல் இந்த அப்டேட் சோதனை முறையில் காணப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐமெசேஜ்' (iMessage) சேவையில் ஏற்கனவே இதுபோன்ற வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் ரகசியமான தகவல்களையோ அல்லது சஸ்பென்ஸ் நிறைந்த செய்திகளையோ மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து அனுப்ப முடியும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory