» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ராஜினாமா செய்ய சொன்ன அமெரிக்க செனட்டர்: பதிலடி கொடுத்த ஜெலன்ஸ்கி!
திங்கள் 3, மார்ச் 2025 4:07:42 PM (IST)
தன்னை ராஜினாமா செய்ய சொன்ன அமெரிக்க செனட்டருக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிலடி கொடுத்துள்ளார்.

"நாங்கள் இருப்பதால் போரில் நீடிக்கிறீர்கள். இல்லையொன்றால் இந்த போரில் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை. நீங்கள் மூன்றாம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்" என்று டிரம்ப் காட்டமாக கூறி உள்ளார். இந்த வாக்குவாதத்தை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்து பாதியில் வெளியேறினார் ஜெலன்ஸ்கி.
இக்கூட்டத்திற்கு பிறகு வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சி கிரகாம், உக்ரைன் அதிபரை விமர்சனம் செய்தார். உக்ரைன் அதிபர் ராஜினாமா செய்துவிட்டு, எங்களுடன் சரியாக பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய ஒருவரை அனுப்ப வேண்டும், அல்லது அவர் மனம் மாற வேண்டும் என்று கிரகாம் கூறினார். மேலும், வெள்ளை மாளிகையில் நடந்த விவாதம் 'பேரழிவு' என்று கூறிய அவர், ஜெலன்ஸ்கியின் தலைமை அமெரிக்க-உக்ரைன் உறவுகளுக்கு ஒரு தடையாக மாறிவிட்டதாக கூறினார்.
அமெரிக்க செனட்டர் கூறிய கருத்துக்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, 'கிரகாம் நல்ல மனிதர், அவரது கருத்தை மதிக்க விரும்பினால், அவர் உக்ரைன் குடிமகனாக வேண்டும்' என்றார். "கிரகாம் உக்ரைனுக்கு வந்தால் நான் அவருக்கு உக்ரைன் குடியுரிமையை வழங்குவேன். அவர் எங்கள் நாட்டின் குடிமகனாக மாறுவார். அதன்பின்னர் அவரது குரல் வலுவடையும். அப்போது, யார் அதிபராக இருக்க வேண்டும் என்ற தலைப்பில் உக்ரைனின் குடிமகனாக அவர் பேசுவதை நான் கேட்பேன்" என்றார் ஜெலன்ஸ்கி.
இதற்கு பதிலளித்த கிரகாம், "துரதிர்ஷ்டவசமாக, தேர்தல் நடைபெறும் வரை, உக்ரைனில் யாருக்கும் ஆதரவாக குரல் கொடுக்க முடியாது" என்றார். நீண்டகாலமாக உக்ரைனின் ஆதரவாளராக இருந்த கிரகாம் தற்போது ஜெலன்ஸ்கியின் கடுமையான விமர்சகராக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
கந்தசாமிMar 6, 2025 - 01:37:04 PM | Posted IP 172.7*****
எவனாவது சொந்த நாட்டை விட்டு தருவானா
ஆம்Mar 4, 2025 - 04:46:20 PM | Posted IP 172.7*****
குட்டையன் ஜெலன்ஸ்கி ஒரு முட்டா பய , கூ முட்டா பையனை தேர்ந்தெடுத்தால் நாடு நாசமாக போகும்
unmaiMar 4, 2025 - 12:47:36 PM | Posted IP 162.1*****
triumph solvathu sari, zelensky porai udane niruthi kondal avarukum avar naatu makkalukum nanmaiyaaga irukum.. illaiyel vilaivugal ithai vidavum mosamaga irukum.. ukraine makkale zelenskyai manika maatargal.. amaithi ondre theervaga irukum illaiyel anaivarukum ithu paathipai yerpaduthum..
மேலும் தொடரும் செய்திகள்

சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூர் ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு!
செவ்வாய் 6, மே 2025 3:42:12 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி : அமெரிக்க அதிபர் உத்தரவு
திங்கள் 5, மே 2025 11:48:08 AM (IST)

அணு ஆயுதங்களை பயன்படுத்தி இந்தியாவை தாக்குவோம்: பாகிஸ்தான் மிரட்டல்
ஞாயிறு 4, மே 2025 9:16:36 PM (IST)

போப் போல் ஆடை அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் : சமூக வலைதளத்தில் வைரல்!!
சனி 3, மே 2025 5:31:07 PM (IST)

பிரதமர் மோடிக்கு டிரம்ப் அரசு முழு ஆதரவு: வெளியுறவுத்துறை அதிகாரி அறிவிப்பு
சனி 3, மே 2025 10:42:58 AM (IST)

ஆனந்த்Mar 6, 2025 - 01:38:13 PM | Posted IP 172.7*****