» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா, பாகிஸ்தான் பிரச்னைகளை பேசி தீர்க்க வேண்டும்: அமெரிக்கா அறிவுரை

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 12:38:58 PM (IST)

இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தை தணித்து, பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.

பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்ட நபர்களை இந்திய உளவுத்துறையினர் பாகிஸ்தான் மண்ணில் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம்சாட்டியதாக பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இது தவறானது மற்றும் இந்தியாவிற்கு எதிராக செய்யப்படும் பொய் பிரசாரம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மேத்யூ மில்லர் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து மீடியா தகவல்களை பார்த்தோம். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எங்களிடம் எந்த கருத்தும் இல்லை. நாங்கள் தலையிடவும் விரும்பவில்லை. பதற்றத்தை தணிக்கவும், பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் ஊக்கப்படுத்துகிறோம்''. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory