» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கடலில் படகு கவிழ்ந்து 91பேர் பலி: காலரா வதந்தியால் ஆப்பிரிக்காவில் சோகம்

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 8:33:43 AM (IST)



ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடலில் படகு கவிழ்ந்து 91 பேர் உயிரிழந்தனர். காலரா பரவுவதாக வதந்தி பரவியதால் தப்பிச்செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது .

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொசாம்பிக். தீவு நாடான இங்கு கடந்த சில நாட்களாக காலரா தொற்று பரவி வருவதாக வதந்தி பரவியது. இதனால் பீதியடைந்த மக்கள் காலரா தொற்றில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று எண்ணி அங்கிருந்து கூட்டம், கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

அதன்படி நம்புலா மாகாணம் மொசூர் நகரில் இருந்து மீன்பிடி படகு ஒன்று புறப்பட்டது. இதில் 130-க்கும் மேற்பட்ட மக்கள் ஏறி அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதனையடுத்து தகவலின் பேரில் கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த சிலர் மீட்கப்பட்டு மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டனர். 

எனினும் குழந்தைகள், பெண்கள் உள்பட 91 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கடலில் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றிச்சென்றதால் அந்த படகு கவிழ்ந்தது தெரிய வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory