» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக 100 விமானங்கள் ரத்து: ரயில் சேவையும் பாதிப்பு!
சனி 6, ஏப்ரல் 2024 12:02:39 PM (IST)
ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மேலும் மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல் ரெட்பெர்ன் ரயில் நிலையத்தில் பல்வேறு உபகரணங்கள் சேதமடைந்தன. எனவே அங்கு ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் ரெயில் மற்றும் விமான பயணிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனர்.