» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் கடும் குளிர்; 36 சிறுவர்கள் சாவு: பள்ளிகளில் காலை கூட்டங்களை நடத்த தடை!

வெள்ளி 12, ஜனவரி 2024 8:22:14 AM (IST)



பாகிஸ்தானில் கடும் குளிருக்கு 36 சிறுவர்கள் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் நிமோனியா காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பாகிஸ்தானில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர் காலம் ஆகும். அதன்படி கடந்த மாதத்துக்கும் மேலாகவே பாகிஸ்தானில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெப்ப நிலை இயல்பை விடவும் மிகவும் குறைவாக பதிவாகி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் குளிரின் தாக்கம் மிகுதியாக உள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப்பில் வாட்டி வதைத்து வரும் குளிரின் காரணமாக நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் நிமோனியா காய்ச்சலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பால் 36 சிறுவர்கள் பலியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் நிமோனியா காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர். இதை தொடர்ந்து பள்ளிக் கூடங்களில் காலை கூட்டங்களை நடத்த பஞ்சாப் மாகாண அரசு தடை விதித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory