» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!
புதன் 18, மார்ச் 2026 4:35:53 PM (IST)

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு டெல்லியின் பாலம் பகுதியில் உள்ள ஒரு நான்கு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை சுமார் 7 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. குறுகிய கால இடைவெளியில் தீ மற்ற தளங்களுக்கும் வேகமாகப் பரவியது. தகவல் அறிந்தவுடன் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
அதிகாலை நேரம் என்பதால் குடியிருப்பவாசிகள் உறக்கத்திலிருந்த நிலையில், தீயும் புகையும் சூழ்ந்ததில் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீயில் இருந்து தப்பிக்க மேல் மாடியிலிருந்து குதித்த இருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு முதல்வர் ரேகா குப்தா இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும், கட்டிடத்தில் முறையான தீயணைப்புப் பாதுகாப்பு வசதிகள் இருந்ததா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயிலுக்கு ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வ ஒப்புதல்!
திங்கள் 22, ஜூன் 2026 5:14:00 PM (IST)

நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயற்சி : உத்தரப்பிரதேசம், பீகாரில் 10 பேர் கைது
திங்கள் 22, ஜூன் 2026 11:28:42 AM (IST)

தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!
திங்கள் 22, ஜூன் 2026 10:54:12 AM (IST)

உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் 16 வகை கூட்டு மருந்துகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:19:02 AM (IST)

மராட்டியத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் கோவில் மேற்கூரை இடிந்து 7 பக்தர்கள் பலி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:11:51 AM (IST)

செல்போன் பறித்துவிட்டு ஸ்கூட்டரில் தப்பிய வாலிபர் திடீர் மரணம்: கூட்டாளி கைது!
சனி 20, ஜூன் 2026 12:16:00 PM (IST)


