» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: செந்தில் பாலாஜியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை!
புதன் 18, மார்ச் 2026 8:24:38 AM (IST)
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக, தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க.) தலைவர் விஜய் முன்னிலையில் நடைபெற்றதால், அவரிடமும் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த ஜனவரி 12 மற்றும் 19-ஆம் தேதிகளில் விஜய் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சி.பி.ஐ. அழைப்பாணை அனுப்பியது. சம்பவம் நடந்த அன்று அவர் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைப் பார்வையிட்டது மற்றும் அவரது அறக்கட்டளை சார்பில் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்குத் குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாகத் த.வெ.க. தரப்பினர் அவர் மீது சந்தேகம் எழுப்பி புகார் அளித்திருந்ததாலும், சம்பவத்தின் பின்னணி குறித்து முழுமையாக அறியவும் அவரிடம் விசாரணை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த 9-ஆம் தேதி ஆஜராக வேண்டிய செந்தில் பாலாஜி, நேற்று காலை 10:30 மணியளவில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திற்கு வந்தார். காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணை மாலை 5 மணி வரை நீடித்தது.
விசாரணையின் போது அதிகாரிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் விரிவான பதில்களை அளித்தார். குறிப்பாகத் த.வெ.க. தரப்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் 6 மணி நேர விசாரணைக்குப் பிறகு மாலை 5:20 மணியளவில் செந்தில் பாலாஜி அலுவலகத்திலிருந்து வெளியேறினார்.
விசாரணை குறித்த விவரங்கள் எதனையும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்காமல் காரில் புறப்பட்டுச் சென்றார். அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுமா என்பது குறித்துச் சி.பி.ஐ. தரப்பில் அதிகாரப்பூர்வத் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்றாலும், உடனடியாக அடுத்த விசாரணை இருக்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயிலுக்கு ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வ ஒப்புதல்!
திங்கள் 22, ஜூன் 2026 5:14:00 PM (IST)

நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயற்சி : உத்தரப்பிரதேசம், பீகாரில் 10 பேர் கைது
திங்கள் 22, ஜூன் 2026 11:28:42 AM (IST)

தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!
திங்கள் 22, ஜூன் 2026 10:54:12 AM (IST)

உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் 16 வகை கூட்டு மருந்துகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:19:02 AM (IST)

மராட்டியத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் கோவில் மேற்கூரை இடிந்து 7 பக்தர்கள் பலி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:11:51 AM (IST)

செல்போன் பறித்துவிட்டு ஸ்கூட்டரில் தப்பிய வாலிபர் திடீர் மரணம்: கூட்டாளி கைது!
சனி 20, ஜூன் 2026 12:16:00 PM (IST)


