» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்: மாநிலங்களவையில் குரல் எழுப்பிய அ.தி.மு.க.!
சனி 14, மார்ச் 2026 8:51:29 AM (IST)

விளாத்திகுளம் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து, தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் இன்பதுரை எழுப்பிய விவகாரம், அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நேரமில்லா நேரத்தின்போது, அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "அவைத்தலைவருக்கு எனது கண்ணீர் வணக்கம். தமிழகம் தினம் ஒரு 'நிர்பயா' வழக்கைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இது வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல, நாட்டின் மகள்களைக் காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான கோரிக்கை.
தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் மூன்று கொடூரச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 2½ வயதுக் குழந்தை மீதான வன்கொடுமை, மதுராந்தகத்தில் 14 வயதுச் சிறுமி மீதான தாக்குதல் எனத் தமிழகம் தவிக்கிறது. குறிப்பாக, விளாத்திகுளம் மாணவி காணாமல் போனபோது காவல்துறை புகாரைப் பெறாமல் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளது."
தொடர்ந்து பேசிய அவர், மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைக்குக் குரல் கொடுத்தவர்கள், தமிழகப் பெண்களுக்காகவும் இரங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். "மணிப்பூர் சம்பவத்தை ஆய்வு செய்யக் குழு அனுப்பியது போல, நாடாளுமன்றக் குழுவையும், தேசிய மகளிர் ஆணையத்தையும் உடனடியாகத் தமிழகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.
எம்.பி. இன்பதுரையின் இந்தப் பேச்சிற்கு, காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டதால், அவையில் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ராகுல் காந்தி ஜூன் 17 முதல் நாடு முழுவதும் பிரச்சாரம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 1:09:38 PM (IST)

தாய்லாந்திலிருந்து ரூ.11.82 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: கேரள மாடல் அழகி அதிரடி கைது
சனி 13, ஜூன் 2026 12:30:17 PM (IST)

ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்: ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்!
சனி 13, ஜூன் 2026 11:44:11 AM (IST)

எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்: கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சுவாமி தரிசனம்...!
வெள்ளி 12, ஜூன் 2026 5:43:40 PM (IST)

மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு: குடியரசுத் தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
வெள்ளி 12, ஜூன் 2026 4:32:09 PM (IST)

ஓமனில் எண்ணெய்க் கப்பலை தாக்கிய அமெரிக்கா: 3 மாலுமிகள் பலி - இந்தியா கண்டனம்!
வியாழன் 11, ஜூன் 2026 4:01:42 PM (IST)


