» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழில் முருகன் பாடலை பாடி அசத்திய பீகார் இளம் எம்.எல்.ஏ மைதிலி தாகூர்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 11:13:01 AM (IST)
Tried singing this beautiful Tamil Bhajan 🙏 pic.twitter.com/ruxmoqu8ft
— Maithili Thakur (@maithilithakur) February 15, 2026
பீகார் இளம் எம்.எல்.ஏ மைதிலி தாகூர் தாகூர், கடினமான தமிழ் உச்சரிப்புகளைக் கொண்ட முருகன் பாடலைத் துல்லியமாகப் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பீகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றார். இதன் மூலம் 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்தார்.
இந்நிலையில், கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பீகார் இளம் எம்.எல்.ஏ மைதிலி தாக்கூர் முருகன் பாடலை தமிழில் பாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீகாரைச் சேர்ந்த 24 வயதான மைதிலி தாக்கூர், சிறுவயதிலேயே இசை சார்ந்த ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரது திறமையைப் பாராட்டி, பீகார் மாநில தேர்தல் ஆணையம் இவரைத் தனது விளம்பரத் தூதராக (State Icon) நியமித்துள்ளது.
இசைத் துறையில் மொழி கடந்து ஆர்வம் காட்டி வரும் மைதிலி, ஏற்கனவே அருணகிரிநாதரின் "முத்தையருள் பத்தித் திருநகை..." என்ற திருப்புகழ் பாடலைப் பாடி இணையத்தில் வைரலானார். வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழின் கடினமான சந்தப் பாடல்களைத் தெளிவான உச்சரிப்புடன் அவர் பாடுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடகு சுற்றுலாத் தலத்தில் கோர விபத்து: யானைகள் சண்டையில் சிக்கி பெண் பலி!
திங்கள் 18, மே 2026 5:55:02 PM (IST)

கேரளாவில் 10 ஆண்டுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி: புதிய முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்பு!
திங்கள் 18, மே 2026 12:34:51 PM (IST)

ஹார்முஸ் நீரிணையை கடந்து 20,000 டன் சமையல் எரிவாயுவுடன் குஜராத் வந்தது இந்தியக் கப்பல்!
திங்கள் 18, மே 2026 10:54:33 AM (IST)

ஓடும் காரில் திடீர் தீ; சிசுவுடன் இளம்பெண் பலியான கொடூரம் - போலீஸ் விசாரணை!
ஞாயிறு 17, மே 2026 11:49:21 AM (IST)

மருத்துவ உலகில் பெரு வியப்பு: 5 நாட்கள் போராடி 4 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்!
சனி 16, மே 2026 5:24:58 PM (IST)

பிரதமரின் வேண்டுகோளை மீறி வாகன ஊர்வலம்: பாஜக பிரமுகர் மீது ம.பி முதல்வர் நடவடிக்கை
சனி 16, மே 2026 12:44:51 PM (IST)


