» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பள்ளிகளில் இலவச நாப்கின் கிடைக்க மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்: மீறினால் பள்ளி அங்கீகாரம் ரத்து!
சனி 31, ஜனவரி 2026 10:37:36 AM (IST)

சட்டப்பிரிவு 21ன்கீழ் மாதவிடாய் சுகாதாரம்- அடிப்படை உரிமை பள்ளிகளில் பெண்களுக்கு இலவச நாப்கின் கிடைக்க மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
நாடு முழுவதும் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளில் தேவையானோருக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும், நாப்கின்களை வாங்க கூட முடியாத நிலையில் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவிகளின் சூழல் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் பல மாணவிகள் பள்ளி படிப்பையை கைவிடும் நிலை உள்ளது. அதனால் பள்ளிகளில் இலவச சானிடரி நாப்கின் வழங்கிட அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் ‘மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை’ அகில இந்திய அளவில் ஏன் செயல்படுத்தக் கூடாது? என்று ஜெயா தாக்கூர் மற்றும் ஜார்க்கண்ட்டை சேர்ந்த பங்கஜ் குமார் மண்டல் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அதனை விரிவாக விசாரித்த உச்ச நீதிமன்றம், வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டு கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,‘‘நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு நடத்தும் அல்லது தனியார் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் ஒவ்வொரு பள்ளியிலும், பயன்படுத்தக்கூடிய நீர் இணைப்புடன் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதி வழங்கப்படுவதை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளி கழிப்பறைகளிலும் சோப்பு மற்றும் தண்ணீர் எல்லா நேரங்களிலும் கிடைக்க வேண்டும்.
நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு நடத்தும் அல்லது தனியார் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் ஒவ்வொரு பள்ளியும் மக்கும் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குவதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும். இத்தகைய சானிட்டரி நாப்கின்கள், பெண் மாணவர்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவு வாழ்வதற்கான அடிப்பை உரிமையை வழங்கி உள்ளது. எனவே மாதவிடாய் சுகாதாரத்திற்கான உரிமையையும், மாதவிடாய் சுகாதாரப் பொருட்களைப் பெறுவதற்கான உரிமை இதன் கீழ் ஒரு அடிப்படை உரிமை என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை பின்பற்றவில்லை என்றால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கையுடன் கூடிய உத்தரவை பிறப்பித்தனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: ஐ.டி ரெய்டின் போது பயங்கரம்!
சனி 31, ஜனவரி 2026 11:44:42 AM (IST)

பெண் கமாண்டோ படுகொலை : வரதட்சணை விவகாரத்தில் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 30, ஜனவரி 2026 4:56:57 PM (IST)

யுஜிசியின் புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
வெள்ளி 30, ஜனவரி 2026 10:30:01 AM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 29, ஜனவரி 2026 5:23:49 PM (IST)

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!
வியாழன் 29, ஜனவரி 2026 12:46:13 PM (IST)

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொன்ற நர்ஸ் கைது!
வியாழன் 29, ஜனவரி 2026 8:24:37 AM (IST)