» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பணி நேரத்தில் பெண்களுடன்... ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்ட்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 11:49:20 AM (IST)
கர்நாடகாவில் பணி நேரத்தில் பெண்களுடன் நெருக்கமாக இருந்ததாக வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், டி.ஜி.பி. ராமச்சந்திர ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ். இவர் தனது அலுவலகத்தில், பணி நேரத்தில் பெண்களுடன் நெருக்கமாக பழகிய வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அவர் பெலகாவியில் இருந்தபோது இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ். இவர் தனது அலுவலகத்தில், பணி நேரத்தில் பெண்களுடன் நெருக்கமாக பழகிய வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அவர் பெலகாவியில் இருந்தபோது இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பெண்களுடன் ராமச்சந்திர ராவ் இருப்பதை யாரோ மர்ம நபர்கள் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இதில் அவர் அலுவலக அறையிலேயே, பல்வேறு பெண்களுடன், ஆபாச செயல்களில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த பரபரப்பான வீடியோ வைரலானதும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டி.ஜி.பி. அளவிலான அதிகாரி, அரசு அலுவலகத்தில் நடந்து கொண்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியபோது முதல்வர் சித்தராமையா கூறும்போது, இந்த விவகாரம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கூறினார்.
இந்த சூழலில், டி.ஜி.பி. அந்தஸ்திலான மூத்த அதிகாரி ராமசந்திர ராவை கர்நாடக அரசு இன்று சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டு உள்ளது. வீடியோ விவரங்கள் முதல்-மந்திரிக்கு தெரிந்ததும் அதனை பார்த்து அவர் கடுமையான கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.
காவல் காக்கும் இடத்தில் இதுபோன்ற சம்பவம் எப்படி நடைபெற கூடும் என கேட்டு, அதுதொடர்பான விவரங்களை அளிக்கும்படி கேட்டு கொண்டார். இதனால், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அரசியல் ரீதியிலான நெருக்கடியும் அதிகரித்து உள்ளது. அரசு, முறையான விசாரணை அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி எதிர்க்கட்சிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
அந்த வீடியோவில், அலுவலக நேரத்தில் பல்வேறு பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வெவ்வேறு தருணங்களில் பல பெண்கள் வெவ்வேறு ஆடைகளில் டி.ஜி.பி. அலுவலகத்தில் வந்து செல்லும் காட்சிகள் யாருக்கும் தெரியாமல் படம் பிடிக்கப்பட்டு உள்ளன. அவர் கர்நாடக உள்துறை மந்திரியையும் சந்தித்து சர்ச்சை விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார். எனினும், அரசு சஸ்பெண்டு நடவடிக்கையை எடுத்துள்ளது. இவர், 14.8 கிலோ எடை கொண்ட தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய பிரபல கன்னட நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தை ஆவார்.
டி.ஜி.பி. ராமச்சந்திர ராவ் விளக்கம்
வீடியோ தொடர்பாக ராமச்சந்திர ராவ் நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது,"நான் பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு, பெலகாவி மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோது எடுக்கப்பட்டது. அந்த பழைய வீடியோக்களை யாரோ வெளியிட்டுள்ளனர்” என்றார்.
சிறிது நேரத்தில், முதலில் கூறிய கருத்தை ராமச்சந்திர ராவ் மறுத்து, பல்டி அடித்து மீண்டும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,"இந்த வீடியோக்கள் உண்மை அல்ல. அவை போலி வீடியோக்கள். யாரோ சதி செய்து இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து எனது வக்கீலுடன் ஆலோசித்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரத்தில், போலீஸ் டி.ஜி.பி. ராமச்சந்திர ராவ் மாறி மாறி பேசியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ராமச்சந்திர ராவ் ஓய்வு பெற இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அவர் தொடர்பான வீடியோ வெளியாகி கர்நாடக போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:31:57 PM (IST)

கோவையில் ஏழுமலையான் கோயில் பணிகள் விரைவில் துவங்கும் : தேவஸ்தான அதிகாரி தகவல்
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:29:04 PM (IST)

பேருந்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ பரவல் - உயிரை மாய்த்த நபர்!
திங்கள் 19, ஜனவரி 2026 3:30:50 PM (IST)

கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின்னரும் தொடர்ந்து பிரசாரம் செய்தது ஏன்? விஜய்யிடம் சிபிஐ கேள்வி
திங்கள் 19, ஜனவரி 2026 12:54:46 PM (IST)

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழக நிர்வாகிகளுக்கு ராகுல் அறிவுறுத்தல்
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:36:39 AM (IST)

நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
சனி 17, ஜனவரி 2026 5:00:23 PM (IST)