» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து

செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:57:11 AM (IST)

பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இன்று 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடும் குளிர், பனி மற்றும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலையிலேயே பனி படர்ந்து தெளிவற்ற வானிலை நிலவியது. டெல்லி நகரின் பல்வேறு பகுதிகள் பனிப்போர்வை போர்த்தியது போன்று உள்ளது. பகல் நேரத்திலும் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றன. 

கடந்த சில நாட்களாக டெல்லியில் பனிமூட்டம் காரணமாக விமானங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. சில சமயங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இன்று மொத்தமாக 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

60 விமானங்களின் புறப்பாடு மற்றும் 58 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் விமான சேவை ரத்துசெய்யப்பட்டன. வானிலை சற்று சீரான பிறகு படிப்படியாக விமான சேவைகள் இயக்கப்படும் என டெல்லி விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory