» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இண்டிகோ பிரச்சனையால் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு: உச்ச வரம்பை நிர்ணயித்த மத்திய அரசு!
சனி 6, டிசம்பர் 2025 5:34:06 PM (IST)
இண்டிகோ விமான சேவை பாதிப்பால் விமானக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் விமானக் கட்டண உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது.
மத்திய அரசின் புதிய ஓய்வு விதிகளால் ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவையில் இன்று 5 ஆவது நாளாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்றும் முக்கிய நகரங்களில் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் விமான சேவை ஓரிரு நாள்களில் சீராகும் என்றும் விமான நிறுவனங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதனிடையே இண்டிகோ விமான சேவை பாதிப்பால் மற்ற விமான நிறுவனங்கள் விமானக் கட்டணத்தை உயர்த்தின. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் பலரும் சமூக ஊடகங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, விமானக் கட்டண உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது. விமான நிறுவனங்கள், விமானக் கட்டணங்களை உயர்த்தியதற்கு கவலை தெரிவித்துள்ள அமைச்சகம், விமானக் கட்டணங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் நிலைமை சீராகும் வரை இந்த விமானக் கட்டண உச்ச வரம்பு அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
விமான நிறுவனங்கள் இந்த கட்டண உச்ச வரம்பை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், அதனை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. அவசரமாக பயணம் செய்ய வேண்டியவர்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், நோயாளிகள் எந்தவித இடையூறும் இன்றி பயணிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளுக்கான கட்டணத்தை எந்த தாமதமும் இன்றி நாளைக்குள்(டிச. 7) இரவு 8 மணிக்குள் பயணிகளுக்கு திருப்பியளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோயில்களை நிர்வகிக்க சனாதன தர்ம ரக்ஷா வாரியம் தேவை: பவன் கல்யாண் கருத்து
சனி 6, டிசம்பர் 2025 12:12:00 PM (IST)

இந்தியா - ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள்: மோடி - புதின் முன்னிலையில் கையெழுத்து!
சனி 6, டிசம்பர் 2025 10:39:49 AM (IST)

இண்டிகோ விமான சேவை ரத்து: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காணொலியில் பங்கேற்ற மணமக்கள்!!
சனி 6, டிசம்பர் 2025 8:39:43 AM (IST)

மகாத்மா காந்தி செயல்களின் தாக்கம் இன்றுவரை பொருத்தமானதாக உள்ளது: ரஷிய அதிபர் புதின்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 5:05:25 PM (IST)

இண்டிகோ நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் : விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:38:12 PM (IST)

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை : பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:25:58 AM (IST)


.gif)
அதுDec 6, 2025 - 06:12:02 PM | Posted IP 172.7*****