» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி: தர்மேந்திர பிரதான்
வியாழன் 4, டிசம்பர் 2025 12:22:21 PM (IST)
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்க தயாராக உள்ளோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது. இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதம் தெரிவித்து பின்னர் எழுந்த எதிர்ப்பினால் பின்வாங்கியது.
இந்நிலையில், மக்களவையில், பி.எம்.ஸ்ரீ நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில், நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:31:57 PM (IST)

கோவையில் ஏழுமலையான் கோயில் பணிகள் விரைவில் துவங்கும் : தேவஸ்தான அதிகாரி தகவல்
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:29:04 PM (IST)

பணி நேரத்தில் பெண்களுடன்... ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்ட்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 11:49:20 AM (IST)

பேருந்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ பரவல் - உயிரை மாய்த்த நபர்!
திங்கள் 19, ஜனவரி 2026 3:30:50 PM (IST)

கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின்னரும் தொடர்ந்து பிரசாரம் செய்தது ஏன்? விஜய்யிடம் சிபிஐ கேள்வி
திங்கள் 19, ஜனவரி 2026 12:54:46 PM (IST)

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழக நிர்வாகிகளுக்கு ராகுல் அறிவுறுத்தல்
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:36:39 AM (IST)

