» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு!!
புதன் 3, டிசம்பர் 2025 3:22:30 PM (IST)
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்துள்ளது. சந்தை மதிப்பின்படி, ஒரு டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 90.11 ஆக உள்ளது.
இன்று காலை 10 மணி அளவில், ஒரு அமெரிக்க டாலர் ரூ. 90.11 ஆக இருந்தது. இந்த சரிவு முன் எப்போதும் இல்லாததது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வர்த்தகர்கள், "இந்த வீழ்ச்சி ஆச்சரியமல்ல. ஆனால், சரிவின் வேகம் ஏமாற்றமளித்துள்ளது. ரூபாய் சரிவுக்கு பல காரணிகள் உள்ளன.
அமெரிக்க - இந்திய வர்த்தக விவாதங்களில் நிலவும் சுணக்கம், சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை ஆகியவை காரணமாக, உலக முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து தங்கள் பணத்தை எடுத்ததே இதற்குக் காரணம். பெரும்பாலான முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலர் தொடர்ந்து வலுபெற்றதால், முதலீட்டாளர்கள் டாலரை நோக்கித் திரும்பினர்.” என தெரிவித்துள்ளனர்.
ரூபாய் சரிவு காரணமாக இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக, கச்சா எண்ணெய், மின்னணு மற்றும் தொழில்துறை பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் உயர்கின்றன. வெளிநாட்டுக் கடன்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு கடன் சுமை மேலும் கூடுகிறது. இதனால், சாமானிய மக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதேநேரத்தில், இந்த சரிவால் ஏற்றுமதியாளர்கள் லாபம் அடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி: தர்மேந்திர பிரதான்
வியாழன் 4, டிசம்பர் 2025 12:22:21 PM (IST)

ஒரே நாடு, ஒரே தேர்தல்: இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்புமுனை - ராம்நாத் கோவிந்த் பேச்சு
வியாழன் 4, டிசம்பர் 2025 11:16:19 AM (IST)

சஞ்சார் சாத்தி செயலியை டெலிட் செய்து கொள்ளலாம் : மத்திய அரசு விளக்கம்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:19:08 PM (IST)

மருத்துவக் கவுன்சிலால் நிராகரிக்கப்பட்ட 3 அடி உயர கணேஷ் பரையா அரசு மருத்துவரானார்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:07:09 PM (IST)

துளு மக்களின் தெய்வத்தை கேலி செய்ததாக புகார் : பகிரங்க மன்னிப்பு கோரிய ரன்வீர் சிங்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:23:07 PM (IST)

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.70 கோடி: மத்திய நிதி அமைச்சகம் தகவல்
திங்கள் 1, டிசம்பர் 2025 4:51:46 PM (IST)


.gif)