» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சஞ்சார் சாத்தி செயலியை டெலிட் செய்து கொள்ளலாம் : மத்திய அரசு விளக்கம்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:19:08 PM (IST)

சஞ்சார் சாத்தி செயலியை வேண்டாம் என்று நினைப்பவர்கள், நீக்கிக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த செயலி அனைத்து புதிய தொலைபேசிகளிலும் இருக்க வேண்டும் எனவும் பழைய மொபைல் போன்களிலும் சாப்டவேர் அப்டேட் மூலமாக இந்த செயலி இடம் பெற வேண்டும் எனவும் அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த செயலி தொடங்கப்பட்டது. தொலைந்துபோன அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சஞ்சார் சாத்தி செயலி மூலம் பெறலாம்.
அதே சமயம் சஞ்சார் சாத்தி செயலி நமது தொலைபேசியிலிருந்து நிறைய தரவை கோரக்கூடும். இதில் அழைப்பு பதிவுகள், மெசேஜ்கள், கேமரா மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்வதற்கான அணுகல் ஆகியவை அடங்கும் என்பதால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக்கும் முடிவிற்கு வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், சஞ்சார் சாத்தி செயலி மொபைல் போன்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "இந்த செயலி அனைவரையும் சென்றடையச் செய்வது நமது பொறுப்பு. நீங்கள் அதை நீக்க விரும்பினால், அதை நீக்குங்கள். நீங்கள் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அதை பதிவு செய்யாதீர்கள். நீங்கள் செயலியில் பதிவு செய்தால், அது செயலில் இருக்கும். நீங்கள் அதைப் பதிவு செய்யாவிட்டால், அது செயலற்றதாகவே இருக்கும்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி: மும்பை, புனே, நாக்பூர் மாநகராட்சிகள் பாஜக வசம்!
சனி 17, ஜனவரி 2026 10:13:06 AM (IST)

இந்தியா தனது எதிர்காலத்தை ஸ்டார்ட்-அப் புரட்சியில் காண்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 17, ஜனவரி 2026 8:41:49 AM (IST)

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி!
சனி 17, ஜனவரி 2026 8:34:16 AM (IST)

தமிழர்களின் பொங்கல் பண்டிகை உலகளாவிய விழாவாக மாறிவிட்டது: பிரதமர் மோடி பேச்சு
புதன் 14, ஜனவரி 2026 12:04:17 PM (IST)
ஜனநாயகன் திரைப்படத்தை தடுக்க நினைப்பதா? மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:20:12 PM (IST)

ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்: பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!
செவ்வாய் 13, ஜனவரி 2026 11:30:35 AM (IST)

