» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
துளு மக்களின் தெய்வத்தை கேலி செய்ததாக புகார் : பகிரங்க மன்னிப்பு கோரிய ரன்வீர் சிங்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:23:07 PM (IST)

துளு மக்களின் தெய்வத்தை கேலி செய்ததாக புகார் எழுந்த நிலையில், நடிகர் ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘காந்தாரா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பூத கோலா வழிபாட்டு முறையை ரன்வீர் சிங் நடித்துக் காட்டினார். மேலும், அந்தத் தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் செயல் துளு நாடு மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘காந்தாரா’ படத்தில் வரும் காட்சிகள் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் துளு மக்களின் கலாச்சாரம் மற்றும் தெய்வ வழிபாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
அப்படிப்பட்ட புனிதமான தெய்வத்தை ரன்வீர் சிங் கேலி செய்யும் விதமாக பாவனை செய்ததாகவும், அதனை ‘பேய்’ என்று தவறாக அழைத்ததாகவும் துளு அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும், இந்தச் சம்பவம் நடந்தபோது மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த ரிஷப் ஷெட்டி அதைத் தடுக்காமல் சிரித்ததற்கும் கண்டனங்கள் எழுந்தன.
துளு சமுதாய தலைவர்கள், ரன்வீர் சிங் மற்றும் ரிஷப் ஷெட்டி இருவரும் கத்ரி மஞ்சுநாதா கோயிலுக்கு வந்து தெய்வ சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். சமூக வலைதளங்களிலும் ரன்வீருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்தன.
இதனையடுத்து, ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். அதில், "ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், சம்பிரதாயத்தையும் மதிப்பவன். எனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இன்று வானில் அரிய நிகழ்வு: ரத்த நிலவை வெறும் கண்களால் பார்க்கலாமா?
செவ்வாய் 3, மார்ச் 2026 12:47:38 PM (IST)

பெண் குழந்தைகளுக்கான லட்சாதிபதி மகள் திட்டம் அறிமுகம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:13:16 AM (IST)

மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும்: நெதன்யாகுவுடன் மோடி அவசர ஆலோசனை
திங்கள் 2, மார்ச் 2026 5:55:10 PM (IST)

நாக்பூர் வெடிபொருள் தொழிற்சாலையில் கோர விபத்து; 17 பேர் உடல் சிதறி பலி!
திங்கள் 2, மார்ச் 2026 11:34:33 AM (IST)

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!
ஞாயிறு 1, மார்ச் 2026 11:55:03 AM (IST)

பேய் ஓட்டுவதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கோவில் பூசாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
ஞாயிறு 1, மார்ச் 2026 11:09:07 AM (IST)

