» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குஜராத்தில் சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.7,737 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு
சனி 18, அக்டோபர் 2025 5:40:55 PM (IST)
குஜராத்தில் 809 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய 9 அதிவிரைவு சாலைகளை கட்டமைக்க ரூ.5,576 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
குஜராத்தில் சாலைகள் மற்றும் கட்டிட துறைகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 124 திட்ட பணிகள் நடைபெறுவதற்காக முதல்-அமைச்சர் புபேந்திரா பட்டேல் ரூ.7,737 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இதன்படி, 809 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய 9 அதிவிரைவு சாலைகளை கட்டமைக்க ரூ.5,576 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அதிக போக்குவரத்து நெருக்கடியான நிலையிலும், பாதுகாப்பு, வேகம் மற்றும் வசதி ஆகியவற்றை மேம்படுத்தி தரும் நோக்கில் இந்த திட்டம் அமையும்.இதேபோன்று, பருவகாலத்திற்கு ஏற்ப மீள்தன்மையுடன் இருக்க கூடிய மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாட்டுடன் கூடிய சாலைகளை குஜராத்தில் உருவாக்குவதற்காக ரூ.1,147 கோடிக்கு முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த திட்டத்தின்படி, 271 கி.மீ. தொலைவுக்காக மொத்தம் 20 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். இதுதவிர, மாநில சாலைகளின் மேற்புற தரம் மேம்படும் வகையிலான 803 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய 79 திட்டப்பணிகளுக்கு ரூ.986 கோடி நிதி ஒதுக்கவும் முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோயில்களை நிர்வகிக்க சனாதன தர்ம ரக்ஷா வாரியம் தேவை: பவன் கல்யாண் கருத்து
சனி 6, டிசம்பர் 2025 12:12:00 PM (IST)

இந்தியா - ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள்: மோடி - புதின் முன்னிலையில் கையெழுத்து!
சனி 6, டிசம்பர் 2025 10:39:49 AM (IST)

இண்டிகோ விமான சேவை ரத்து: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காணொலியில் பங்கேற்ற மணமக்கள்!!
சனி 6, டிசம்பர் 2025 8:39:43 AM (IST)

மகாத்மா காந்தி செயல்களின் தாக்கம் இன்றுவரை பொருத்தமானதாக உள்ளது: ரஷிய அதிபர் புதின்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 5:05:25 PM (IST)

இண்டிகோ நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் : விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:38:12 PM (IST)

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை : பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:25:58 AM (IST)


.gif)