» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தூக்க மாத்திரைகள் கொடுத்து கணவனை கொன்ற மனைவி: தலைமறைவான கள்ளக்காதலனுக்கு வலை!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:51:14 AM (IST)
குண்டூர் அருகே பிரியாணியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செ்யதனர். தலைமறைவான கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் துகிராலா மண்டலம் சிலுவூரைச் சேர்ந்த லோகம் சிவநாகராஜு(45). இவரது மனைவி லட்சுமி மாதுரி(38). இவர்களுக்கு கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்து. தற்போது 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.ஐதராபாத் சினிமா ஹாலில் வேலை செய்து கொண்டிருந்த லட்சுமி மாதுரிக்கு அடிக்கடி சினிமாவுக்கு வரும் கோபி என்பவருடன் பழக்கமாகி, தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இதை கண்டித்த கணவனை தீர்த்துக்கட்ட லட்சுமி மாதுரி முடிவு செய்தார். அதன்படி சிவநாகராஜுக்கு பிரியாணியில் 20 தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கி கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட சிவநாகராஜு ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றதும், இரவு 11.30 மணிக்கு லட்சுமி மாதுரி போன் செய்து காதலன் கோபியை வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்துள்ளார்.
பின்னர் கோபி வீட்டிலிருந்து சென்ற நிலையில், கணவரின் சடலத்தின் அருகில் அமர்ந்திருந்த லட்சுமி மாதுரி விடிய விடிய செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்தபடி பொழுதை கழித்துள்ளார். பின்னர் விடியற்காலை 4 மணிக்கு வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து, தனது கணவன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடினார்.
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் நாகராஜுன் மார்பு அருகே எலும்புகள் உடைந்திருப்பது, சுவாசம் தடைப்பட்டதாலேயே அவர் இறந்தார் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து லட்சுமி மாதுரியை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் காதலன் கோபியைத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கர்நாடகத்தில் பைக் டாக்ஸி மீதான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 23, ஜனவரி 2026 5:07:26 PM (IST)

கேரளாவுக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்: பினராயி விஜயன் நன்றி!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:39:21 PM (IST)

திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான வழக்கு : மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:53:57 AM (IST)

பெங்களூரு விமான நிலையத்தில் கொரிய பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: ஊழியர் கைது!
வியாழன் 22, ஜனவரி 2026 5:11:36 PM (IST)

ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 வீரர்கள் பலி!
வியாழன் 22, ஜனவரி 2026 3:45:41 PM (IST)

கேரள நபர் தற்கொலை: பாலியல் தொல்லை வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது!
புதன் 21, ஜனவரி 2026 4:50:10 PM (IST)

