» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரூர் போன்று அசம்பாவிதம் ஏற்படும்: ஜெகன் மோகன் ரெட்டி ரோடு ஷோவுக்கு தடை!

புதன் 8, அக்டோபர் 2025 11:10:09 AM (IST)

கரூரில் நடந்தது போல் அபாயம் ஏற்படும் என்று சுட்டிக்காட்டி ஜெகன் மோகன் ரெட்டி ரோடு ஷோவுக்கு ஆந்திர மாநில போலீசார் தடை விதித்தனர்.

ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி நாளை அனகாப்பள்ளி மாவட்டம், நர்சி பட்டினம் மக்கவர பாலத்தில் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க உள்ளார். இதற்காக ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்கிறார்.

விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான ரோடு ஷோவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ரோடு ஷோவில் கலந்து கொள்ள ஏராளமான தொண்டர்களை திரட்டி வருகின்றனர். ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோ நடத்தினால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தமிழ்நாடு மாநிலம் கரூரில் நடந்தது போல் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளதாக கூறி போலீசார் ரோடு ஷோவுக்கு தடை விதித்தனர்.

இதுகுறித்து அனகாப்பள்ளி மாவட்ட தலைவரும், முன்னாள் மந்திரியுமான அமர்நாத் ரெட்டி கூறுகையில்: அரசு எத்தனை தடை விதித்தாலும் சாலை பயணம் தொடரும். யார் எங்களை தடுக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்வோம். போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் தரவில்லை. தகவலுக்காக கொடுத்து இருக்கிறோம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory