» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் அக்டோபர் 1-ம் தேதி உயருகிறது!
புதன் 24, செப்டம்பர் 2025 4:01:06 PM (IST)
வருகிற அக்.1ஆம் தேதி முதல் ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட உள்ளது.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில் ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம், அக்டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்படுகிறது. பயோமெட்ரிக் (Biometric) மாற்றம் செய்ய, கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125-ஆக உயர்த்தப்படுகிறது.
புதிய ஆதார் பெற விண்ணப்பிப்போருக்கு கட்டணம் இல்லை. இந்த கட்டண உயர்வு, செப்டம்பர் 30, 2028 வரை இது அமலில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களை பாதிக்கக்கூடும் என்றாலும், உயர்வு மிகக்குறைந்த அளவில் மட்டுமே உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: மம்தா பானர்ஜி கடும் கண்டனம்
வியாழன் 8, ஜனவரி 2026 4:38:10 PM (IST)

பனிச்சறுக்கு விபத்து: வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் மகன் மரணம்!
வியாழன் 8, ஜனவரி 2026 10:19:38 AM (IST)

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி : இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 5:21:12 PM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:56:38 PM (IST)

சாகர் தீவை இணைக்க ரூ.1,670 கோடி செலவில் பாலம்: மம்தா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:51:15 AM (IST)

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை
திங்கள் 5, ஜனவரி 2026 12:11:59 PM (IST)

