» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தனது 75-வது பிறந்தநாளை இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறார். பா.ஜனதாவை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் சக்தியாக புதிய உச்சத்துக்கு கொண்டு சென்ற தலைவரான மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளனர். இதையொட்டி பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைத்திட வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)


.gif)