» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)
பயணிகளின் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட் வெளியிட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில் டிக்கெட்களுக்கான முன்பதிவு அட்டவணைகளை (Chart list) வெளியிடும் முறையில் புதிய விதிமுறைகளை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் இருக்கை நிலையை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அதாவது தற்போது வரை ரயில்கள் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சார்ட் லிஸ்ட் வெளியிடப்படுகிறது.
இதனால் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்து இருப்பவர்கள் தங்கள் டிக்கெட் கன்பார்ம் ஆகுமா? இல்லையா? என்பது தெரியாமல் திக் திக் மனநிலையுடன் காத்திருப்பார்கள். டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் போகும் பட்சத்தில் இறுதி நேரத்தில் மாற்று வழிகளை தேட வேண்டியிருக்கும். இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இத்தகைய சிரமங்களை தவிர்க்கும் விதமாக சராசரியாக 10 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் லிஸ்ட் வெளியிடும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது.
இதன்படி, காலை 5:01 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு அட்டவணை முந்தைய நாள் இரவு 8 மணிக்குள் தயாரிக்கப்படும். மதியம் 2:01 மணி முதல் இரவு 11:59 மணி வரை மற்றும் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு குறைந்தது 10 மணி நேரத்திற்கு முன்பே அட்டவணை தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைப்படி சார்ட் லிஸ்ட் வெளியிடுவதற்கு டிக்கெட் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS)-த்திற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளதாம். விரைவில் இது இந்த விதிகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பயன்பாட்டுக்கு வந்தால் பயணிகள் தங்கள் டிக்கெட் கன்பார்ம் ஆகிவிட்டதா? இல்லையா என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்பதால் ரயில்வேயின் இந்த வசதி பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)

மசோதாக்களுக்கு தமிழில் பெயர் வைக்காதது ஏன்? - கனிமொழி எம்.பி. கேள்வி
வியாழன் 18, டிசம்பர் 2025 3:51:31 PM (IST)

பனிக்காலங்களில் கிரிக்கெட் போட்டிகளை தென் இந்தியாவில் நடத்தலாம்: சசிதரூர் யோசனை
வியாழன் 18, டிசம்பர் 2025 3:46:32 PM (IST)


.gif)