» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)

தமிழகத்தின் வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த ஜிஎஸ்டி 2.0 புத்தகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னையில் நேற்று வெளியிட்டார்.
அப்போது அவர் கூறும்போது, நீண்ட நாள் கோரிக்கையான ஜிஎஸ்டி குறைப்பு என்பது ஒவ்வொரு குடிமகனின் வெற்றியாகும். தீபாவளிக்கு முன்பு இதை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் விரும்பினார். ஆனால் நவராத்திரிக்கு முன்பே வரிகுறைப்பு அமலாகும் என்றார். ஜிஎஸ்டி 2.0 புத்தகத்தில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி வரிகுறைப்பில் டிராக்டர்களுக்கான ஜிஎஸ்டி என்பது 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள புதிய டிராக்டருக்கு ரூ.42 ஆயிரம் வரை சேமிக்க முடியும். டிராக்டர் டயர்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள டிராக்டர் டயர்களின் விலையில் ரூ.6,500 குறைந்துள்ளது. காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்குடி துணிகளுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தஞ்சாவூர் பொம்மைகள், காஞ்சிபுரம் கைவினை பைகள், பவானி ஜமக்காளம், சுவாமிமலை வெண்கல சின்னங்கள், மணப்பாறை முறுக்கு, தென்னை நார் பொருட்கள் ஆகியவற்றுக்கும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. ரூ.1 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் வரையும், ரூ.6 லட்சம் மதிப்பிலான சிறிய ரக கார்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையும், ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆட்டோக்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பரோட்டா, ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவு பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் ரூ.5 முதல் ரூ.10 வரை செலவு குறையும் என்றும் எதிர்பார்க்கலாம். தமிழக பள்ளிகளில் பயின்று வரும் 1.5 கோடி குழந்தைகள் பயனடையும் வகையில் குறிப்பேடுகள், ரப்பர், பென்சில், கிரெயான்ஸ் போன்றவற்றில் ரூ.850 வரை பெற்றோரால் இனி சேமிக்க முடியும். அதேபோல் ரூ.1,000 மதிப்பிலான மருந்துகளுக்கு ரூ.100 வரை ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புற்றுநோய்களுக்கான மருந்துகளுக்கு ரூ.1200 வரை விலை குறைகிறது.
கட்டுமானத் தொழில்களில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சிமென்ட் கொள்முதலில் ரூ.5 ஆயிரம் வரை சேமிக்கலாம். தமிழகத்தில் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு இது நேரடியாக பயனளிக்கும். குறிப்பாக ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தொலைக்காட்சி பெட்டிகளுக்கு ரூ.4 ஆயிரம் வரையும், ரூ.35 ஆயிரம் மதிப்பிலான ஏசி-களுக்கு ரூ.3,500 வரையும் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான ஹீட்டருக்கு ரூ.7 ஆயிரம் வரையிலும் விலை குறையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு: மம்தா தலைமையில் பேரணி!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:43:30 PM (IST)

பொங்கல் பண்டிகைதோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதியுதவி: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:01:41 PM (IST)

அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 சகோதரிகள் உயிரிழப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 11:26:18 AM (IST)

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு: விரைவில் விசாரணை!
செவ்வாய் 4, நவம்பர் 2025 10:39:28 AM (IST)

தெரு நாய்கள் வழக்கில் நவம்பர் 7ம் தேதி தீர்ப்பு : உச்சநீதிமன்றம் அறிவிப்பு
திங்கள் 3, நவம்பர் 2025 12:48:51 PM (IST)

தெரு நாய் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சனி 1, நவம்பர் 2025 5:11:53 PM (IST)


.gif)