» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 81 சதவீதமாக உயர்வு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்!!
வியாழன் 11, செப்டம்பர் 2025 11:55:56 AM (IST)
சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி மூலம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘எழுத்தறிவு என்பது வாசிப்பு மற்றும் எழுதுதலைத் தாண்டிச் செல்கிறது. இது கண்ணியம், அதிகாரமளித்தல் மற்றும் தன்னம்பிக்கைக்கான ஒரு வழியாகும். இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் கடந்த 2011-ம் ஆண்டு 74 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24-ம் ஆண்டில் 80.9 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.அந்தவகையில் கடந்த 13 ஆண்டுகளில் இந்த விகிதம் அதிகரித்து உள்ளது’ என குறிப்பிட்டார்.அதேநேரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் எழுத்தறிவு ஒரு யதார்த்தமாக மாறும்போதுதான் உண்மையான முன்னேற்றம் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு: மம்தா தலைமையில் பேரணி!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:43:30 PM (IST)

பொங்கல் பண்டிகைதோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதியுதவி: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:01:41 PM (IST)

அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 சகோதரிகள் உயிரிழப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 11:26:18 AM (IST)

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு: விரைவில் விசாரணை!
செவ்வாய் 4, நவம்பர் 2025 10:39:28 AM (IST)

தெரு நாய்கள் வழக்கில் நவம்பர் 7ம் தேதி தீர்ப்பு : உச்சநீதிமன்றம் அறிவிப்பு
திங்கள் 3, நவம்பர் 2025 12:48:51 PM (IST)

தெரு நாய் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சனி 1, நவம்பர் 2025 5:11:53 PM (IST)


.gif)