» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கூண்டு வைத்தால மட்டும் போதுமா? வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த கிராம மக்கள்!

வியாழன் 11, செப்டம்பர் 2025 11:50:23 AM (IST)



கர்நாடக மாநிலத்தில் வனத்துறை அதிகாரிகள் 7 பேரை கிராம மக்கள் புலிக்கூண்டில் சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியைச் ஒட்டிய விவசாய நிலங்களில் புலிகள் நடமாட்டம் உள்ளதாகவும், கால்நடைகளை கொன்று வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு மட்டும் சென்றுவிடுவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் அங்கு ஆய்வுக்கு சென்ற வனத்துறையினரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அப்போது முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிவித்து, வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என ஏழு பேரையும் புலியை பிடிக்க அமைத்த கூண்டில் அடைத்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து , கிராமத்தினர் கூறுகையில், "இரண்டு மாதங்களாக வன விலங்குகளால் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். புலி குறித்து தகவல் தெரிவித்தும் தாமதமாக வந்தது ஏன்?' என கேள்வி எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory