» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அரவிந்த் கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல உ.பி நீதிமன்றம் அனுமதி!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 4:15:43 PM (IST)
அரவிந்த் கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உ.பி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2014 மக்களவைத் தேர்தலின்போது அமேதி மாவட்டத்தின் கெளரிகஞ்ச் மற்றும் முசாபிர்கானா பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். இதன் காரணமாக எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்திற்கும் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை அளிக்கப்பட்டது.இந்த நிலையில், தனது கடவுச்சீட்டின் தற்போதைய நிலை காரணமாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அதை புதுப்பிக்க அனுமதிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால்மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி/எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கேஜரிவாலின் கடவுச்சீட்டைப் புதுப்பித்துக்கொள்ள நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.
அதன்படி, அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக கோர்ட்டிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அவர் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய நிலையில், அவருக்கு சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அவரது வழக்குரைஞர் ருத்ர பிரதாப் சிங் மதன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)


.gif)