» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திரப் பிரதேசத்துக்கு ரெட் அலர்ட்: மிக கனமழைக்கு வாய்ப்பு!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 5:51:37 PM (IST)
ஆந்திராவில் 200 மி.மீ. அளவில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணிநேரத்துக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் விஷாகப்பட்டிணம், அனகப்பள்ளி, அம்பேத்கர் கோனசீமா, காக்கிநாடா, மேற்கு கோதாவரி உள்பட ஏராளமான மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் "ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கனமழை மற்றும் புயல் காற்றினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அம்மாநில தலைமைச் செயலாளர் கே விஜயானந்த் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், "பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, தடையற்ற மின் விநியோகத்தை மேற்கொள்ள மின் நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மின்சாரத்தினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதேவேளையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் தயாராக இருக்க வேண்டும்.” என தலைமைச் செயலாளர் விஜயானந்த் அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருவதால், அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் 200 மி.மீ. அளவில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகப்புரம் கோயில்களுக்கான புதிய மேல் சாந்திகள் தேர்வு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:52:38 AM (IST)

பெண்ணை எரித்துக் கொன்று நகையை பறித்த போலீஸ்காரர் மனைவி: பரபரப்பு தகவல்கள்
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:48:43 AM (IST)

பிரதமரின் தீபாவளி பரிசு மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்
சனி 18, அக்டோபர் 2025 5:44:44 PM (IST)

குஜராத்தில் சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.7,737 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு
சனி 18, அக்டோபர் 2025 5:40:55 PM (IST)

குஜராத்தில் பூபேந்திர படேல் அமைச்சரவை பதவியேற்பு: ஜடேஜாவின் மனைவி அமைச்சரானார்
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:21:52 PM (IST)

தமிழக ஆளுநருக்கு எதிரான மனுக்கள் விசாரணை விசாரணை எப்போது? உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 12:33:12 PM (IST)
