» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழக ஆளுநருக்கு எதிரான மனுக்கள் விசாரணை விசாரணை எப்போது? உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

வெள்ளி 17, அக்டோபர் 2025 12:33:12 PM (IST)

ஆளுநருக்கு எதிரான மனு மீது, ஜனாதிபதியின் கேள்விகள் தொடர்பான வழக்கின் முடிவு தெரிந்த பிறகு விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதா, தமிழ்நாடு உடற்கல்வியில், விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம், நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஜனாதிபதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் அனுப்பி வைத்தார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், இவ்வாறு அனுப்பி வைத்ததை ரத்துச் செய்யக் கோரியும் தமிழக அரசின் சார்பில் வக்கீல் மிஷா ரோத்தகி, டி.ஹரீஷ் குமார் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த ரிட் மனுக்கள் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, மசோதாவுக்கான காலக்கெடு விவகாரத்தில் ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு விடை காணும் வழக்கின் முடிவு தெரிந்த பிறகு, இதனை விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி தெரிவித்தார். தனக்கு பதவிக்காலம் இன்னும் 4 வாரங்களே இருப்பதால், அதற்கு முன்பாக இந்த வழக்கில் முடிவு தெரியும் எனவும் அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory