» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ்நாட்டுக்குரிய நிதியை விடுவிக்க கோரிக்கை: நிர்மலா சீதாராமனுடன் தங்கம் தென்னரசு சந்திப்பு!

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 5:36:10 PM (IST)



மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துப் பேசியுள்ளார்.

தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளையும் நாளை மறுநாளும்(ஆக. 20, 21) நடைபெறவிருக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிலையில் தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொள்கிறார்.

இதற்காக இருநாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்துப் பேசியுள்ளார். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நபார்டு நிதியை உடனே விடுவிக்க உள்ளிட்ட தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்துள்ளார். அப்போது திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory