» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்கா வரிவிதிப்பு விவகாரம்: பருத்தி மீதான வரிகள் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 12:22:02 PM (IST)

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், பருத்தி மீதான இறக்குமதி வரிகளை தற்காலிகமாக  ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தில், பருத்தி மீதான இறக்குமதி வரிகளை நீக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வலுயுறுத்தினார். இந்நிலையில், வருகிற செப்டம்பர் 30 வரை பருத்தி மீதான வரிகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளதால், இந்திய ஜவுளித் துறைக்கு உதவியாக பருத்தி மீதான 11% இறக்குமதி வரிக்கு தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory