» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்காவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் கொள்முதல் நிறுத்தமா? - மத்திய அரசு விளக்கம்

சனி 9, ஆகஸ்ட் 2025 3:53:43 PM (IST)

அமெரிக்காவிடம் இருந்து ராணுவ தளவாட கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து உள்ளது. இது இரு நாட்டு உறவில் பெரும் சிக்கலை உருவாக்கி இருக்கிறது. அமெரிக்க அதிபர்டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, அந்த நாட்டுடன் நடந்து வரும் ராணுவ தளவாட கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தன.

ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை என ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளன. மேலும் அமெரிக்காவிடம் இருந்து ராணுவ தளவாட கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைகளின் படி நடந்து வருவதாகவும் தெளிவுபடுத்தி உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory