» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லிக்கு ரெட் அலர்ட்.. வெளுத்து வாங்கும் கனமழை - பல பகுதிகளில் வெள்ளம்!!

சனி 9, ஆகஸ்ட் 2025 12:14:35 PM (IST)

இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், புது டெல்லியில் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நாட்டின் தலைநகரில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது, இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லி-என்சிஆர்-இன் பெரும்பாலான பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பஞ்ச்குயன் மார்க், மதுரா சாலை, சாஸ்திரி பவன், ஆர்.கே. புரம், மோதி பாக், கித்வாய் நகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று இரவு 11 மணியளவில் தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது.

இந்த நிலையில், வடக்கு, மேற்கு, தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய டெல்லி என பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில், மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory