» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: இந்தியா வருமாறு அழைப்பு
சனி 9, ஆகஸ்ட் 2025 12:07:03 PM (IST)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினர். அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது.

உக்ரைன் மோதல் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் குறித்து, மோடியிடம் புடின் விளக்கினார். இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்த பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இருதரப்பு உறவு குறித்து கலந்துரையாடிய தலைவர்கள், அதை இன்னும் வலுப்படுத்த உறுதிபூண்டனர். இது குறித்து தன் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'என் நண்பர் புடினுடன் விரிவான ஆலோசனை நடத்தினேன். உக்ரைன் தொடர்பான சமீபத்திய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
'இருதரப்பு உறவுகள் குறித்து கருத்துகளை பரிமாறி கொண்டோம். இந்தாண்டு, இந்தியா வரும் அதிபர் புடினை வரவேற்க ஆர்வமாக உள்ளேன்' என, தெரிவித்து உள்ளார்.
பிரேசில் அதிபர்
இந்தியாவுக்கு விதித்தது போலவே தென்அமெரிக்க நாடான பிரேசிலுக்கும் 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அரசு அமல் செய்திருக்கிறது. இந்த சூழலில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்ப தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:25:38 AM (IST)

ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 5:39:23 PM (IST)

பொய் வழக்குகள்: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:56:38 AM (IST)

டெல்லி முதல்-அமைச்சர் மீது தாக்குதல்: கைதான வாலிபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:45:20 AM (IST)

முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல் : கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 4:19:17 PM (IST)

துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் முன்னிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 3:37:11 PM (IST)
