» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராகுல் காந்தி அளித்த தரவுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது: ப.சிதம்பரம்

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 11:20:34 AM (IST)

ராகுல் காந்தி அளித்த தரவுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது, பதில் அளிக்க நிறைய இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பா.ஜனதா தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் பெங்களூரு மத்திய தொகுதியில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது: கர்நாடகாவில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோசடி செய்யப்பட்டு திருடப்பட்டது என்பதை நிரூபிக்கும் ஒரு வலிமையான ஆதாரத்தை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.

ராகுல் காந்தி 6 மாத கால கடினமான முயற்சியின் மூலம் சேகரித்த தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் புறக்கணிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது. மகாதேவபுரா தொகுதியில் எவ்வாறு மோசடி செய்யப்பட்டது என்பது குறித்த தரவுகளை ராகுல் காந்தி வழங்கியுள்ளார்; தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நிறைய இருக்கிறது என அதில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

கர்நாடகாAug 9, 2025 - 08:38:51 AM | Posted IP 104.2*****

மழை வரும்போது தவளை வருவது போல,தேர்தல் வரும்போதுதான் இவர் வெளியே வருகிறார்.

srinivasanAug 8, 2025 - 04:33:22 PM | Posted IP 104.2*****

HE IS ANTI INDIAN. CHETTI SUNNI ...............

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory