» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல: தேர்தல் ஆணையம் விளக்கம்
திங்கள் 28, ஜூலை 2025 11:36:59 AM (IST)
பீகாரில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது என்று கூறப்படுவது தவறு என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பீகாரில் சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.திருத்தப்பணியின் முதல்கட்டம் முடிந்தநிலையில், தேர்தல் கமிஷன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளது. அந்த பட்டியல்தான், இறுதி பட்டியலாக இருக்கும் என்று தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், அதற்கு தேர்தல் கமிஷன் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
வீடு, வீடாக சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் அளித்துள்ளனர்.7 கோடியே 24 லட்சம் வாக்காளர்கள், கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்ப்பித்துள்ளனர். 36 லட்சம் பேர், நிரந்தரமாக இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது எங்கு உள்ளனர் என்று தெரியவில்லை. 7 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ளன.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதுதான் இறுதி பட்டியல் என்ற மாயையை சிலர் உருவாக்க பார்க்கிறார்கள். ஆனால் அது இறுதியானது அல்ல. பட்டியலில் தவறுதலாக பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தவறுதலாக பெயர் நீக்கப்பட்டவர்கள் ஆகியோர் குறித்து சுட்டிக் காட்டுவதற்காக ஆகஸ்டு 1-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 1-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பிறகு ஏன் பிரச்சினை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அரசியல் கட்சிகள் அந்த ஒரு மாத காலத்தில், தங்களது முகவர்கள் மூலமாக கோரிக்கை மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கச் சொல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்ப தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:25:38 AM (IST)

ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 5:39:23 PM (IST)

பொய் வழக்குகள்: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:56:38 AM (IST)

டெல்லி முதல்-அமைச்சர் மீது தாக்குதல்: கைதான வாலிபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:45:20 AM (IST)

முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல் : கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 4:19:17 PM (IST)

துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் முன்னிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 3:37:11 PM (IST)
