» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கார்கில் வெற்றி தினம்: வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலை நினைவூட்டுகிறது - பிரதமர் மோடி

சனி 26, ஜூலை 2025 5:01:17 PM (IST)

கார்கில் வெற்றி தினம் வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலை நினைவூட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் லடாக் யூனியனில் உள்ள கார்கில் மலைப் பகுதியை குறுக்கு வழியில் ஆக்கிரமித்த பாகிஸ்தானை அடித்து விரட்டி நம் ராணுவ வீரர்கள் 1999 ஜூலை 26ல் வெற்றிக் கொடி நாட்டினர். போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று கார்கில் தினத்தையொட்டி, பிரதமர் மோடி சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கார்கில் போர் நினைவு தினம், வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலை நினைவூட்டுகிறது. நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். தாய்நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த வீரர்களின் நினைவுகள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் முன்மாதிரியாகவும், ஊக்கமும் அளிக்கும். ஜெய் ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில், கார்கில் போர் நினைவு தினத்தையொட்டி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். முன்னதாக, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கார்கில் தினத்தன்று, நாட்டின் கவுரவத்தைப் பாதுகாப்பதில் துணிச்சல், மன உறுதியை வெளிப்படுத்திய நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கார்கில் போரில் நமது ஆயுதப் படைகள் வெளிப்படுத்திய உறுதி மற்றும் தியாகம் காலத்தால் அழியாத நினைவூட்டல், அவர்களின் சேவைக்கு இந்தியா என்றும் கடமைப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory