» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பும் 25 ஓடிடி தளங்களுக்கு தடை: மத்திய அரசு உத்தரவு!

சனி 26, ஜூலை 2025 10:51:26 AM (IST)



ஆபாச, அநாகரிக உள்ளடக்கம் மற்றும் சட்ட விதிமீறல் தொடர்பாக 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஆல்ட், உல்லு, பிக் ஷாட்ஸ் ஆப், டெசிஃபிக்ஸ், பூமெக்ஸ், நவரசா லைட், குலாப் ஆப், கங்ன் ஆப், புல் ஆப், ஜால்வா ஆப், வாவ் என்டர்டைன்மென்ட், லுக் என்டர்டைன்மென்ட், ஹிட்பிரைம், ஃபெனியோ, ஷோஎக்ஸ், சோல் டாக்கீஸ், அட்டா டிவி, ஹாட்எக்ஸ் விஐபி, மூட்எக்ஸ், நியான்எக்ஸ் விஐபி உள்ளிட்ட 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த வலைதளங்களை பொதுமக்கள் அணுக முடியாத வகையில் அவற்றை முடக்குமாறு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, சட்ட விவகாரத் துறை, எப்ஐசிசிஐ, சிஐஐ போன்ற தொழில் அமைப்புகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory