» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாநிலங்களவை எம்.பி.யாக கமல்ஹாசன் பதவி ஏற்பு : தமிழில் உறுதிமொழி ஏற்றார்!

வெள்ளி 25, ஜூலை 2025 12:25:21 PM (IST)



மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசன் உள்பட 4 பேர் தமிழ் மொழியில் உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவைச் சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி. வில்சன். அதிமுகவின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில், காலியாகும் இடங்களுக்கான தோ்தல் முன்னதாக கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் திமுக, அதிமுக சார்பில் முன்னிறுத்தப்பட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தோ்வாகினர். இதில், திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், எம்பியாக பதவியேற்க கமல்ஹாசன் நேற்று தில்லிக்குச் சென்றார். அதைத்தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் தமிழ் மொழியில் அவர் பதவியேற்றுக் கொண்டார். கமல்ஹாசனைத் தவிர்த்து, திமுகவின் பி. வில்சன், கவிஞர் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும் தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.


மக்கள் கருத்து

கொலைஞர்Jul 28, 2025 - 06:30:21 PM | Posted IP 172.7*****

திமுக ஒரு முட்டாள் கட்சி விஜய் வந்தால் எதிர்பார்களாம், கூத்தாடி கொமல் வந்தால் பதவியாம் . என்ன இது

கவிஞர் கவிஞர்Jul 26, 2025 - 09:00:48 AM | Posted IP 172.7*****

தமிழக MP க்களுக்கு சபையில் என்ன நடக்குதுனே தெரியாமல் இருந்து விட்டு கான்டீன் பொய் சாப்பிட்டுவிட்டு வருவார்கள். இப்போது இவர் பேசுவது யாருக்கும் புரியாது, அவருக்கே புரியாது . தமிழக MP க்கள் இனிமேல் சபைக்குள் போவார்களா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory