» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது: ரிசர்வ் வங்கி தகவல்

வியாழன் 24, ஜூலை 2025 12:04:28 PM (IST)

இந்திய பொருளாதாரம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

உலகநாடுகளிடையே நிலவி வரும் மோதல், அமெரிக்காவின் வரிவிதிப்பு குழப்பம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நடுவே இந்திய பொருளாதாரம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய பொருளாதாரம் கடந்த ஜூன்-ஜூலை காலத்தில் சீராக உள்ளது.

உலக நாடுகளிடையே ஏற்பட்ட மோதல், அமெரிக்காவின் வரிவிதிப்பு இழுபறி உள்ளிட்ட காரணங்களை காட்டிலும் இந்திய பொருளாதாரம் சீரான நிலையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 4 மாதங்களில் இந்தியாவின் பணவீக்கம் 4 சதவீதத்திற்குள்ளாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியா பொருளாதாரம், உள்நாட்டு வாணிபத்தால் இயங்குகிறது" என கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory