» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அக்பர், பாபருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சிவாஜிக்கு இல்லை: பவன் கல்யாண் ஆதங்கம்!!

புதன் 23, ஜூலை 2025 11:59:56 AM (IST)

இந்திய வரலாற்றில் அக்பர், பாபருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சத்ரபதி சிவாஜிக்கு அளிக்கப்படவில்லை என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்.

விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அக்பர் குறித்து உயர்வாக பேசுகிறோம். பாபர் போல் அதிரடியான ஆக்கிரமிப்பாளரை மகிமைப் படுத்துகிறோம். ஆனால் விஜயநகரப் பேரரசு பற்றி ஏன் எதுவும் சொல்லப்படவில்லை? சத்ரபதி சிவாஜி, தமிழ்நாட்டில் கோவில்களை காப்பாற்றிய வரலாறு ஏன் பாடப்புத்தகங்களில் இடம்பெறவில்லை?" எனக் கேள்வியெழுப்பினார்.

இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மற்ற அரசர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறிய அவர், இந்தியர் அனைவருக்கும் இந்த உண்மைகளை அறிய வேண்டிய அவசியமுள்ளதாக கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory