» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடி, 26ஆம் தேதி இரவு தூத்துக்குடி வருகை: 27ல் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை?

செவ்வாய் 22, ஜூலை 2025 4:04:26 PM (IST)

தமிழகம் வரும் பிரதமர் மோடி, ஜூலை 27 ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26 ஆம் தேதி தமிழகம் வருகிறார். நாளை இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்து 26 ஆம் தேதி இரவு தூத்துக்குடி வருகிறார். விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்த பின்னர் ஜூலை 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் திருவாதிரை பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்கிறார்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் சாலை வலம் மேற்கொள்ளவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் அன்றைய தினம் பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தஞ்சாவூரில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory