» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆமதாபாத் விமான விபத்தில் விதிமீறல் கண்டுபிடிப்பு: ஏா் இந்தியா அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 11:47:26 AM (IST)

ஆமதாபாத் விமான விபத்தில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக உத்தரவின் அடிப்படையில் 3 அதிகாரிகளை ‘ஏர் இந்தியா’ நிறுவனம் பணிநீக்கம் செய்தது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து கடந்த 12-ந் தேதி லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது தூரத்தில் ஒரு கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானத்தில் இருந்த விமானி, பணியாளர்கள் உள்பட 241 பேர் பலியானார்கள். ஒரே ஒரு பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து முழுமையாக விசாரிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, ஏர் இந்தியா போக்குவரத்தின் வருகைப் பதிவேடு, பணிப் பதிவேடு, செயல்பாட்டு அறிக்கை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் சில விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
நிர்ணயிக்கப்பட்ட நேர வரம்பைவிட கூடுதல் நேரம் விமானிகளுக்கு பணி ஒதுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது போல மேலும் சில விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து அந்த விதிமீறலில் ஈடுபட்ட 3 அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை ஏர் இந்தியா நிறுவனம் நேற்று உடனடியாக செயல்படுத்தியது. 3 அதிகாரிகளை பணிநீக்கம் செய்ததுடன் அந்த தகவலை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கும் தெரிவித்து இருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையில், இயக்க கட்டுப்பாட்டு மைய தலைவர் உள்பட 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதிக்கு அவமரியாதை : பிரதமர் மோடி கண்டனம்; மம்தா விளக்கம்
ஞாயிறு 8, மார்ச் 2026 8:31:09 PM (IST)

ஈரான் கப்பல் மூழ்கடிப்பு: மனிதாபிமான அடிப்படையில் உதவினோம் - அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
சனி 7, மார்ச் 2026 4:14:06 PM (IST)

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு: கட்டுப்பாடு மீண்டும் அமல்
சனி 7, மார்ச் 2026 11:21:45 AM (IST)

இந்தியா எண்ணெய் வாங்க அனுமதிக்க அமெரிக்கா யார்? - மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்குதல்!
வெள்ளி 6, மார்ச் 2026 12:42:42 PM (IST)
ஈரான் போர்க்கப்பல் மீதான தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மவுனம் ஏன்? - ராகுல் காந்தி கடும் கேள்வி!
வியாழன் 5, மார்ச் 2026 4:08:11 PM (IST)

பீகார் அரசியலில் அதிரடி திருப்பம்: ராஜினாமா முடிவில் முதல்வர் நிதிஷ் குமார்?
வியாழன் 5, மார்ச் 2026 10:49:22 AM (IST)


ஒருவன்Jun 23, 2025 - 03:16:43 PM | Posted IP 172.7*****