» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் விமானம் விழுந்து நொறுங்கி கோர விபத்து!
வியாழன் 12, ஜூன் 2025 3:32:09 PM (IST)

அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ன விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17-க்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.
அந்த விமானத்தில் சுமார் 242 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பயணித்த 242 பேர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இருந்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் 169 இந்தியர்கள், பிரிட்டனை சேர்ந்தவர்கள் 53 பேர், கனடாவை சேர்ந்த ஒருவர், போர்ச்சுக்கல்லை சேர்ந்த 7 பேர் இருந்துள்ளனர். இரு விமானிகள் உள்பட 12 பணியாளர்களும் விமானத்தில் பயணித்துள்ளனர்.
இந்த விமானத்தில் பயணித்த 242 பேரின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், விபத்து குறித்து ஏர் இந்தியா நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா நிர்வாகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: "ஆமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் இன்று, ஜூன் 12, 2025 அன்று ஒரு சம்பவத்தில் சிக்கியுள்ளது. இதனை நாங்கள் உறுதி செய்கிறோம். கூடுதல் தகவல்களை ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது எக்ஸ் தளத்தில் விரைவில் பகிர்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
விமானம் விழுந்த சம்பவத்தை விபத்து எனக் குறிப்பிடாமல், தாக்குதலுக்கு உள்ளானது போல் சம்பவம் எனக் குறிப்பிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால். விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு ’மே டே’ எனக் கூறப்படும் அவசர தகவலை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)
