» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இனிமேல் குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: கனரா வங்கி அறிவிப்பு
ஞாயிறு 1, ஜூன் 2025 4:00:05 PM (IST)
சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை கனரா வங்கி ரத்து செய்துள்ளது.
பொதுவாக அனைத்து வங்கிகளிலும் ஒவ்வொரு வங்கிக்கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டியது கட்டாயம். அப்படி இல்லாவிட்டால், அதற்கு என தனி அபராதம் விதிக்கப்படும். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.
பொதுத்துறை வங்கியான கனரா வங்கியை பொறுத்தவரை, நகரம் மற்றும் மெட்ரோ நகரங்களில் உள்ள கிளைகளில் ரூ.2 ஆயிரம், சிறிய நகரங்களில் உள்ள கிளைகளில் ரூ.1,000, கிராம பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளில் ரூ.500 என குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அதற்கு ரூ.25 முதல் ரூ.45 வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அனைத்து சராசரி மாதாந்திர இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறையை கனரா வங்கி ரத்து செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கனரா வங்கி தான் முதல்முறையாக இந்த நடவடிக்கை எடுத்து உள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எந்த அபராதமும் இல்லாமல் வங்கிக்கணக்குகளை பணமின்றி பராமரிக்க முடியும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கனரா வங்கி கூறியுள்ளது.
சராசரி மாதாந்திர இருப்புத்தொகை பராமரிக்க தேவையில்லை என்ற முடிவால் சேமிப்புக் கணக்குகள், சம்பள கணக்குகள் என்ஆர்ஐ எஸ்பி கணக்குகள் வைத்து இருப்பவர்கள் பயன் அடைவார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்து, பௌத்தர், சீக்கியர்களை தவிர பிறரின் எஸ்சி சாதி சான்றிதழ் ரத்து : பட்னாவிஸ் அறிவிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 11:58:31 AM (IST)

கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்து தவறாக மொழிபெயர்ப்பு... சர்ச்சையில் சிக்கிய மெட்டா!
வெள்ளி 18, ஜூலை 2025 11:50:54 AM (IST)

மருத்துவமனைக்குள் புகுந்து பரோல் கைதி சுட்டுக் கொலை - பீகாரில் பயங்கரம்!
வெள்ளி 18, ஜூலை 2025 11:04:25 AM (IST)

பீகாரில் 125 யூனிட் வரை வீடுகளுக்கு மின் கட்டணம் இல்லை : முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
வியாழன் 17, ஜூலை 2025 11:57:30 AM (IST)

முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க புதிய மாற்றம்: இனி ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் மட்டுமே!
வியாழன் 17, ஜூலை 2025 10:50:52 AM (IST)

வீடியோவை காட்டி மிரட்டி கல்லூரி மாணவி பலாத்காரம்: பேராசிரியர்கள் உட்பட 3பேர் கைது!
புதன் 16, ஜூலை 2025 5:44:03 PM (IST)
