» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானம்: பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு

புதன் 16, ஜூலை 2025 5:18:58 PM (IST)



பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானியின் துரித நடவடிக்கையால் விமானத்தில் இருந்த 173 பயணிகளும் நூழிலையில் உயிர் தப்பினர். 

தலைநகர் டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு நேற்றிரவு இண்டிகோ விமானம் 6E 2482, 173 பயணிகளுடன் புறப்பட்டது. பாட்னா விமான நிலையத்தின் ரன்வேயில் ஓடுபாதையில் தரையிறங்கும் இடத்துக்கு முன்பே விமானம் தரையிறங்கியுள்ளது. மீதமுள்ள ஓடுபாதையின் நீளம் விமானத்தை நிறுத்துவதற்கு போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த விமானிகள், உடனடியாக விமானத்தை மீண்டும் டேக் ஆப் செய்தனர்.

பின்னர், விமானம் மூன்று முறை வானில் வட்டமிட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறங்கியது. இதனால், விமானத்தில் இருந்த 173 பயணிகளும் நூழிலையில் உயிர் தப்பினர். விமானிகளின் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சமயோசித முடிவு, விமானம் விபத்திலிருந்து தப்புவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக, பாட்னா விமான நிலையத்தின் ஓடுபாதை பிற விமானங்களின் ஓடுபாதையுடன் ஒப்பிடும் போது குறுகிய தூரமுடையது என்பது கவனிக்கத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory